யாழ்.பிரதேச செயலக மட்ட கலாசார,இலக்கிய விழாவில் வெற்றி பெற்றவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

2 weeks ago




யாழ் மாவட்ட செயலக கலாச்சார அலுவலகத்தின் ஏற்பாட்டில் 2024 ஆவது ஆண்டில் 15 பிரதேச செயலகமட்ட கலாசார,இலக்கிய விழாவில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

மாவட்ட மட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆகிய இடங்களைப் பெற்ற சிரேஷ்ட, கனிஷ்ட ,திறந்த பிரிவில் உள்ள மாணவர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று(24) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட உதவி பிரதேச செயலாளர் தர்ஷினி உருத்திரக் கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு கலாச்சார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவம் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி வைத்தார்.

சிரேஷ்ட,கனிஷ்ட ,திறந்த பிரிவில் உள்ள மாணவர்களில் தமிழ்,சிங்கள,ஆங்கில ஆகிய மொழிகளில் ஆன பேச்சுகள், பாடல்கள்,கதைகள் கூறல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், நாட்டார், பாடல்கள், கவிதைகள்,உருப்பெழுத்து எழுதுதல், போன்ற கலை இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கிருஷ்ணகுமார்,15 பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்