நாட்டில் அதிகரித்துள்ள இளம் வயதுக் கர்ப்பம்! பாலியல் துஷ்பிரயோகங்களே காரணம் என்கின்றது ஆய்வு.
இலங்கையில் மீண்டும் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் இளம் வயது கர்ப்பம் என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் முதல் காலாண்டில் மாத்திரம் இளம் வயது கர்ப்பம் தொடர்பான 28 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, இந்த இளம் வயது கர்ப்பம் பாலியல் துஸ்பிரயோகத்தின் நேரடி விளைவாக குறிப்பித்தக்க அதிகரிப்பை கண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் பாதியில் 28 வழக்குகளும் 2023 ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் 18 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இது 55.5 விகித அதிகரிப்பை எடுத்துக்காட்டுகின்றது.
இதனுடன் இணைந்து, பலாத்காரம் மற்றும் கடுமையான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய அறிக்கைகளும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளன.
2024 ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 23 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த 50 வழக்குகளில் கிட்டத்தட்ட பாதி, இந்த ஆண்டு முடியும் முன்னரே பதிவாகியுள்ளது.
ஆகவே இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரி விக்கப்படுகின்றது.
கூடுதலாக, 2024 இன் முதல் ஆறு மாதங்களில் 157 கடுமையான பாலியல் துஸ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.