எரிபொருளை பெறுவதற்கு மத்திய கிழக்கு நாடுகளுடனான பேச்சு வெற்றி பெற்றால் ஜனாதிபதியின் முதல் பயணம் மத்திய கிழக்கு நாட்டுக்கே

1 month ago


எரிபொருளை பெறுவதற்கு மத்திய கிழக்கு நாடுகளுடனான பேச்சு வெற்றி பெற்றால் ஜனாதிபதியின் முதல் பயணம் மத்திய கிழக்கு நாட்டுக்கே

குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பில் மத்திய கிழக்கின் மூன்று நாடுகளுடன் பேச்சு நடக்கிறது.

இந்தப் பேச்சு வெற்றிகரமாக    நிறைவடைந்தால் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக அந்த நாடுகளில் ஒன்றுக்கே செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்தத் தகவலை தென்னிலங்கை தரப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

உத்தியோகபற்றற்ற அந்த            தகவலின்படி, ஜனாதிபதி பயணமாகும் இரண்டாவது நாடாகவே இந்தியா இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு நடந்தால் அது இலங்கை அரசியல் பாரம்பரியத்தில் ஏற்படும் மாற்றமாகவே அமையும்.

ஏனெனில், வழக்கமாக புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதிகள், பிரதமர்கள் தமது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வதே வழக்கமாகும்.

இதேநேரம், குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க மேற்கத்தேய நாடு ஒன்றில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் மூலமாகவே நடத்தி வருகிறார்.

தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான அந்தப் பேராசிரியர் மேற்கத்தேய நாடுகளில் ஒன்றில் வசிக்கின்றபோதிலும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நெருங்கிய நட்பு கொண்ட வர் என்று கூறப்படுகின்றது.

இவரின் தலையீட்டில் இலங்கை குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளது.

இந்தப் பேச்சுகள் வெற்றியடையும் பட்சத்தில் அது இலங்கைக்கு கிடைக்கும் பெரு வெற்றியாக அமையும்.

அத்துடன், குறைந்த விலையில் எரிபொருளையும் வழங்க முடியும்.

எனவே,ஜனாதிபதி இந்தப் பேச்சை வெற்றிபெற வைப்பதற்காக புதிய அரசாங்கம் அமைந்ததும் மத்திய கிழக்கு நாட்டுக்கு பயணமாவார்  என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு பயணமாகும் எண்ணெய் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடுவார் என்று கூறப்படுகின்றது. 


அண்மைய பதிவுகள்