அமெரிக்க ஜனாதிபதித் ட்ரம்ப், அரசில் பணியாற்ற விவேக் இராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் இடம்பிடிப்பு

2 weeks ago




அமெரிக்க ஜனாதிபதித் ட்ரம்ப், அரசில் பணியாற்ற விவேக் இராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் இடம்பிடிப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், தனது அரசில் பணியாற்றவுள்ளவர்களை தெரிவு செய்யும் பணியில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார்.

இதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு அரசின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளார்.

அதேபோன்று, விவேக் இராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் ட்ரம்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த சிறீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.