
சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீயானது சிவனொளிபாத மலைதொடர் வரை பரவியிருந்தது.
அதிக வெப்பகால நிலையினால் வேகமாக தீப்பரவல் ஏற்பட்டது.
தீயை கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், நல்லத்தண்ணி பொலிஸார் மற்றும் நல்லத்தண்ணி வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மவுசாகலை நீர்தேக்கத்தில் நீரை பெற்று 11 தடவைகள் தீப்பரவல் பகுதிக்கு வானிலிருந்து பாய்ச்சிய நிலையில் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹற்றன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலையகத்தில் தொடர்ந்து கடும் வெப்ப கால நிலை காணப்படுவதனால் இனம் தெரியாதோரால் தீ வைக்கும் செயல் இடம் பெற்று வருவாதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
