2025 சீன அரசு இலங்கையின் தேவைப்பாடுகளை ஆராய்ந்து செயல்படவுள்ளது.-- இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்கொங் தெரிவிப்பு

2 months ago



அடுத்த வருடத்தில் சீன அரசாங்கம் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி தேவைப்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செயல்படவுள்ளது என்று இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்கொங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்து வரும்       நாடுகளின் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சீனா அவதானம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், மனித வளம், சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் கவனம் செலுத்தும் - என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட       மக்களுக்கு வழங்குவதற்காக 40 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை சீனா வழங்கியுள்ளது.

முன்னதாக 3 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்