இணையவழி நிதிமோசடி விசார ணைகளுக்கு உதவுவதற்காக சீனாவின் சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்தனர்.

4 months ago


சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையவழி நிதி மோசடிகளின் அதிகரிப்புக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசார ணைகளுக்கு உதவுவதற்காக சீனாவின் சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அண்மைய நாட்களில் நாடு முழுவதும் இணைய வழியில் நிதி மோசடி செய்யும் சம்ப வங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள தோடு அந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் சீனப் பிரஜைகளாக உள்ள தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப் பட்டுள்ள நபர்களின் மடிக் கணினிகள் மற்றும் தொலை பேசியில் உள்ள தரவுகள் சீன மொழியில் இருப்பதால் மேலதிக விசாரணைகளை முன்னெடுப் பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்புடன் பொலிஸார் சீனாவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியை நாடினர். இதையடுத்து குறித்த விசாரணைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சீன விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஜூன் வரையிலான காலப்பகுதி வரையில் இணையம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 137 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 31 பேர் சீனர்களாவர். அவர்களிடம் இருந்து 158 கைபேசிகள், 16 மணிக்கணினிகள், 60 கணினிகள் கைப்பற்றப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.



அண்மைய பதிவுகள்