பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன், நேற்றுக்காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சுடரேற்றி - மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ரவிகரன் நேற்றுக் காலை 11.15 மணியளவில் இறுதிப் போரில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை, தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ரவிகரனுக்கு முல்லைத்தீவு நகரில் வைத்து மக்கள் மாலை அணிவித்து வரவேற்றதுடன் வெடிகொழுத்தி வெற்றிக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.