அமைச்சரவையின் ராஜினாமாவை இந்திய ஜனாதிபதி ஏற்றார்

7 months ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அமைச்சரவையின் ராஜினாமாவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

8 ஆம் திகதி சனிக்கிழமையன்று மாலௌ மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார்.

கூட்டணிக்கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார்.

இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் ஜனாதிபதி சந்தித்து நரேந்திர மோடி ராஜினாமா கடிதம் அளித்திருந்தார்.

17 ஆவது பாராளுமன்றத்தை கலைக்கும் பரிந்துரைகளையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க.கட்சி தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போதைய லோக்சபாவை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து வரும் 8 ஆம் திகதி (சனிக்கிழமை) அன்று மாலை மோடி 3ஆவது முறையாக பதவி ஏற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்குப் பிறகு உறுதியான தகவல் வெளியாகும்.

அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் ஜனாதிபதி சந்தித்து நரேந்திர மோடி ராஜினாமாக் கடிதம் அளித்திருந்தார்.

17 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பரிந்துரைகளையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி, காபந்து பிரதமராகத் தொடரும்படி மோடியைக் கேட்டுக் கொண்டார்.


அண்மைய பதிவுகள்