திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சையை எழுந்துள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சையை எழுந்துள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையை மறுத்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்களின் நம்பிக்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றார் என விமர்சித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை முதல் இந்த விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்முறையாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை தவறானது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகி றார்" என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமராவதியில் கடந்த 18 ஆம் திகதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு,
"திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது.
ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸூம் வெட்கப்பட வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.
திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத் தப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்." என்று தெரிவித்திருந்தார்.