தனது குழந்தை, மனைவியுடன் வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி,பிள்ளை மீது கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் இறுதியாக மோட்டார் சைக்கிள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதால் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படாமல் மதுபோதையில் மீண்டும் அச்சுறுத்துவதால் உடனடியாக அவரை கைது செய்யுமாறு பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.