உடற்கூற்றியல் வினாடி வினாப்போட்டியில் யாழ் மருத்துவபீட அணி இரண்டாம் இடம்
இலங்கை மருத்துவபீடங்களிற்கு இடையிலான உடற்கூற்றியல் வினாடி வினாப்போட்டியில் யாழ் மருத்துவ பீட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை உடற்கூற்றியல் சமூகத் தின் வருடாந்த அமர்வின் ஒரு பகுதியாக இந்த உடற்கூற்றியல் வினாடிவினாப் போட்டியானது இரண்டாவது முறையாக இவ்வருடமும் நடைபெற்றது.
இரு பகுதிகளாக நடைபெற்ற இப் போட்டியில் பத்து அணிகள் பங்குபற்றி இருந்தமையுடன் முதல் பகுதி முடிவில் மூன்று சிறந்த அணிகளாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மருத்துவ பீட அணிகள் தெரிவு செய்யப்பட்டன.
மேற்படி மூன்று அணிகளிற்கும் இடையிலான இறுதி சுற்றுப் போட்டி யானது கடந்த மாதம் 30ம் திகதி இலங்கை மருத்துவ சங்கக் கேட் போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்முடிவில் கொழும்பு மருத்துவ பீட அணி முதலாம் இடத்தையும், யாழ் மருத்துவபீட அணி இரண்டாம் இடத்தையும், பேராதனை மருத்துவ பீட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
யாழ் மருத்துவ பீட அணியை பிரதி நிதித்துவப்படுத்தி விநாயகமூர்த்தி திவாகரன், சிறிஸ்கந்தராஜா லக்சன். அஸ்லாம் பாத்திமா ஹம்தா மற்றும் யுதாரா ரண்லினி ரணசிங்க ஆகியோர் போட்டியிட்டனர்.
மேற்படி மாணவர்களுக்கான தகுந்த ஆலோசனைகளையும் பயிற்சிகளை யும் சிரேஷ்ட விரிவுரையாளர்களான சிவநந்தினி உதயகுமார், துரைரட்ணம் செந்தூரன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் யாழ் மருத்துவபீட உடற்கூற்றியல் துறை வளவாளர்கள் வழங்கினர்.