எம்.பி அர்ச்சுனாவால் கடும் தாக்குதலுக்கு உள்ளான நபர் குருதிக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கடும் தாக்குதலுக்கு உள்ளான நபர் குருதிக் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியொன்றிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
அர்ச்சுனா எம்.பி.யும் அவருடன் இருந்த பிறிதொருவரும் அனுமதியின்றித் தமது திறன்பேசியில் ஒருவரை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போதே அர்ச்சுனா எம்.பி.யால் பலமாகத் தாக்கப்பட்ட நபர் குருதிக் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
