ஒன்றாறியோ மாகாணத்தில் மளிகைக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட் டுள்ளது.
அதன்படி தற்பொழுது மளிகை கடைகளில் சில வகை மதுபானங்கள் விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் மது பானம் விற்பனை செய்ய கடந்த காலங்களில் அனுமதி வழங்கப் படவில்லை.
எனினும் அரசாங்கம் தற்பொழுது சுமார் 4200 மளிகை கடைகளில் பியர், வைன் போன்ற மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி அளவில் அனைத்து மளிகை கடைகளிலும் மதுபான வகைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.