பொத்துவில், அருகம்பை பிரதேசங்களில் தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள்


பொத்துவில், அருகம்பை பிரதேசங்களில் தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் அப்பகுதியில் தற்போது மீண்டும் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அறுகம்பே பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலியர்கள், உள்ளூர் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் நீண்ட காலமாக இஸ்ரேலியப் பிரஜைகள் இங்கு தங்கியிருந்தாலும், அவர்களுடன் யாரும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் தற்போதைய நிலையில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் முப்படையினர் மற்றும் அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தங்கள் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் உறுதியளித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
