கடல் வளங்களை அழிக்கும் இழுவை மீன்பிடி தொழிலை நிறுத்தி விட்டு தமிழ்நாடு மீனவர்கள் போராடுங்கள்.-- அ. அன்னராசா தெரிவிப்பு

5 months ago



சட்டவிரோதமாக எமது கடல் வளங்களை அழிக்கும் இழுவை மீன்பிடி தொழிலை நிறுத்தி விட்டு வீதியில் இறங்கி போராடுங்கள் என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம், காரைநகர் வரை கடல் அட்டை பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கும்போது யாழ்ப்பாணத்தின் சில பிரதேச  செயலகங்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டுள்ளன.

இதனை தகவல் அறியும் சட்ட மூலமாக அணுகிய போது ஒவ்வொரு பிரதேச செயலகமும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் மீனவர்களுக்கு பதில்களை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

நேற்றைய தினம் கொக்குவிலில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.