இலங்கை கடனை செலுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர, 98 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றார்.-- ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு

2 months ago



ஸ்ரீலங்காவின் கடன்களை மீளச் செலுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர, ஒரே மாதத்தில் 98 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன        குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். விமர்சிப்பது இலகுவானது. ஆனால், நடைமுறையில் சில விடயங்கள் சாத்தியமா? என்று சிந்திக்க     வேண்டும்.

நடைமுறைச் சாத்தியத்துக்கும். தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் போலி வாக்குறுதிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இதை அநுர உணர்ந்துள்ளார் என்று ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பெரிய விடயமல்ல என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார்.

அது மாத்திரமல்லாது பணத்தையும் அச்சிட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளைச் செய்யாமல் தான் ரணில் நாட்டை மீட்டெடுத்தார் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம்.

அதிகாரத்துக்கு வந்து ஒரு மாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பைக் குறைக்கவா மக்கள் இவர்களைத் தெரிவு செய்தனர்? என்றும் ராஜித கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மைய பதிவுகள்