லிதுவேனியாவில் சரக்குவிமானமொன்று வீடொன்றிற்கு மீது விழுந்து நொருங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 month ago
லிதுவேனியாவில் சரக்குவிமானமொன்று வீடொன்றிற்கு மீது விழுந்து நொருங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லிதுவேனியாவில் வில்னியுஸ் விமானநிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டி.எச்.எல் நிறுவனத்திற்காக ஸ்விட்எயர் இயக்கிய விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டிற்குஅருகில் விழுந்துள்ளது.
அந்த வீட்டிலிருந்து 12 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமானத்திலிருந்தவர்களிற்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லெய்ப்ஜிக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே விழுந்து நொருங்கியுள்ளது.
ஓடுபாதையிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள வீட்டிலிருந்து புகைமண்டலம் வெளியாவதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.