யாழ்.ஊர்காவற்றுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து வாள்கள் உட்பட ஏழு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
5 months ago

யாழ்.ஊர்காவற்றுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து வாள்கள் உட்பட ஏழு கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட வில்லை என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று நடத்தப்பட்ட சோதனையிலேயே வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், தலைமறைவான நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
