ஸ்காபரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞர் சாவு

6 months ago

ஸ்காபரோவில் இடம்பெற்ற துப்பாக் கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் டொராண்டோ பொலிஸார் தெரி வித்துள்ளனர்.

ஸ்காபரோவின் வார்டன் அவென்யூ மற்றும் எல்லெஸ்மியர் ரோடு பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 10:18 மணி யளவில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் குறித்து பொலிஸாருக்கு அழைப்பு வந்தது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவதிப்பட்ட ஒரு நபரை ஷெல் எரிவாயு நிலையத்தில் அலுவலர்கள் கண்டனர் எனப் பொலிஸ் கூறுகிறது.

உயிரிழந்தவர் பிக்கரிங் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சுலக்ஷன் செல்வசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத் தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததார் என அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில், துப்பாக்கிச் சூடு நடந்தபோது செல்வசிங்கம் அமர்ந்தி ருந்த எஸ்யூவி வாகனத்திலும், பெட்ரோல் பங்க் சுவரிலும் தோட்டா ஓட்டைகள் காணப்பட்டன.

சந்தேக நபர் பல தடவைகள் சுட்டு விட்டு வாகனத்தில் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற வாகனம் அல்லது சந்தேக நபர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

அண்மைய பதிவுகள்