தமிழருக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். -- அமெரிக்க தமிழ் அரசியல் குழு தெரிவிப்பு
இன்னுமோர் இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்தவை வருமாறு,
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசிய வாதம் தமிழர்களுக்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களுக்கான உரிமைகளையும் எதிர்த்து வந்துள்ளது.
இன்னுமோர் இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்.
இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை எதிர்கொள்வதற்கும் தெற்காசியாவில் பாதுகாப்பு ஸ்திரதன்மைக்காகவும் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் - என்றார்.