தாய்வானில் தைசங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் 12-வது மாடியில் வாயு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

2 months ago



தாய்வானில் தைசங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் 12-வது மாடியில் வாயு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 2 பேர் சீனாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மக்காவ் பகுதியில் இருந்து வந்துள்ளனர்.

ஒரு குடும்பத்திலுள்ள 7 பேர் சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர்.

இதனை மக்காவ் சுற்றுலா அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே உத்தரவிட்டு உள்ளார்.

அண்மைய பதிவுகள்