
இலங்கை அரசாங்கம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் புதிய தூதரகத்தை நிறுவியுள்ளது. தூதரக சேவைகள் மார்ச் 03 ஆம் திகதி ஆரம்பமாகும்.
வெலிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிவிப்பின்படி, புதிய அலுவலகம் லெவல் 8, இலக்கம் 38, பெதெரிக் டவர், வாரிங் டெய்லர் வீதி, வெலிங்டன் சென்ட்ரல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
தூதரக கருமபீடம், வாராந்தம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை, பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து திறந்திருக்கும்.
சேவைகளில் கடவுச்சீட்டு செயலாக்கம், பிறப்பு பதிவுகள், இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள், ஓய்வூதியம் தொடர்பான விடயங்கள், வழக்கறிஞரின் அதிகாரங்கள் மற்றும் உறுதிமொழிகள் ஆகியவை அடங்கும்.
மேலதிக விசாரணைகளுக்கு, வெலிங்டனில் உள்ள தூதரகத்தை slhc.well ington@ mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 021 081 43 469 என்ற தொலைபேசி இலக்கத்திலோ காலை 9:30 மணி முதல் மாலை 3:30 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
