இலங்கையில் தரமற்ற மருந்தை கொள்வனவு தொடர்பாக 4 முன்னாள் அமைச்சர்களிடம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம்

1 month ago



தரமற்ற மருந்தை கொள்வனவு தொடர்பாக 4 முன்னாள் அமைச்சர்களிடம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தரமற்ற மருந்தை கொள்வனவு செய்து வைத்தியசாலைகளுக்கு விநியோகித்துள்ளமை சம்பந்தமாக நான்கு முன்னாள் அமைச்சர்கள் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் நேற்று முன்தினம் வாக்குமூலம்  வழங்கியுள்ளனர்.

குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு நேற்று          முன்தினம் அழைக்கப்பட்டவர்களுள் முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ,விதுர விக்ரமநாயக்க, விஜேதாச ராஜபக்ஷ, நசீர் அஹமட் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கு முன்னரும் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரீன் பெர்னாண்டோ, ரொஷான் ரண சிங்க, ரமேஷ் பத்திரன ஆகியோரும் மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

தரமற்ற மருந்தை கொள்வனவு செய்து, நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வேண்டுகோளை பரிசீலித்த பின்னரே, அவர் முன்னாள் அமைச்சர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.



அண்மைய பதிவுகள்