இலங்கையில் பிரபல அரசியல்வாதிகள் 50 பேருக்கு தேர்தலில் போட்டியிடாத முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
6 months ago

இலங்கையில் பிரபல அரசியல்வாதிகள் 50 பேருக்கு தேர்தலில் போட்டியிடாத முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரம சிங்க, பாட்டலி சம்பிக ரணவக, விமல் வீரவன்ஸ போன்ற பிரபல அரசியல்வாதிகள் பலர் பொதுத் தேர்தலில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக இந்த தேர்தல் தீர்மானமிக்கதாக மாறியுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறினார்.
இம்முறை 50 இற்கும் மேற்பட்ட பிரபல அரசியல்வாதிகள் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
