"வடதாரகை" பயணிகள் படகின் திருத்தத்திற்காக 5 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டு 6 மாதங்களின் பின்பு அது சேவைக்கு வருவதாக மாவட்டச் செயலகத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு இடையில் பயணிகள் போக்கு வரத்துச் சேவைக்காக 2017 ஆம் ஆண்டு மாகாண சபைக்காக நெல்சிப் திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபா செலவில் இது கொள்வனவு செய்யப்பட்டது.
சேவையில் ஈடுபட்டிருந்த அந்தப் படகு 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட பழுதை சீர் செய்யவே கடற்படையி னரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வட தாரகை திருத்தத்திற்காக திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படகிற்கான திருத்தத்திற்குரிய 5 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 80 ரூபா பணம் கடற்படையினரின் கணக்கில் 2024-
02-20 ஆம் திகதிய காசோலை மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வழங்கப் பட்டது. வழங்கப்பட்ட பணத்தில் இருந்து திருத்தச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டு படகு மீண்டும் சேவைக்குத் திரும்புகின்றது.
இந்தப் படகின் திருத்தப் பணிகள் முடிவுற்றதனையும் படகு சேவைக்கு திரும்புவதையும் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.
இதேநேரம் மாகாண சபைநின் பெருந்தொகை பணம் செலவு செய்யப்பட்ட படகு உடனடியாக மத்திய அரசின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத தக்கது.