
முல்லைத்தீவு கல்விளான் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (24.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வயலில் அறுவடை செய்த நெல்லை வீதி காவலில் பாதுகாத்தவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
