இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களின் அவசர தேவைக்கு தொலைபேசி இலக்கம் பொலிஸாரால் இன்று அறிவிப்பு.

2 months ago



இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர காலங்களில் உதவுவதற்காக பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (24) அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அல்லது உதவி தேவை என உணர்ந்தால், 071-8592651 என்ற எண்ணில் கரையோர மற்றும் சுற்றுலா பிரிவுக்குப் பொறுப்பான DIG தமயந்த விஜயஸ்ரீயை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் டிஐஜி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளச் சரிபார்ப்புக்காக, சுற்றுலாப் பயணிகள் உதவிக்கு அணுகும் போது தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய பதிவுகள்