பிரசாந்த் நடிப்பில் தயாரான 'அந்தகன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

5 months ago


எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் நடிகர் பிரசாந்த் நடிப்பில் தயாரான 'அந்தகன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்' எனும் திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார்.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்தகன்' எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் தமிழ் திரையுலகில் தொலைத்த அவரது இடத்ை மீண்டும் பெறுவார் என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.


அண்மைய பதிவுகள்