யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு விசா மோசடிகள் அதிகரித்துள்ளன என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும், விசா மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து,கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபா வரையிலான பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர்.
இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வெளிநாட்டு விசா மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
