உலகில் உணவுகள் கிடைக்காத குழந்தைகளின் நிலை 'குழந்தை உணவு' வறுமை என்று வரையறை

6 months ago

அன்றாடம் சத்தான வகையான உணவுகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை 'குழந்தை உணவு' வறுமை என்று யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வரையறுத்துள்ளன.

இந்த நிலையில் குழந்தை உணவு வறுமையால் தெற்காசிய நாடுகள் மற்றும் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் 28 கோடி 10 இலட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து போதாமையால் அவர்களது உயரம் உடல் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த 18.1 கோடி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 63 சதவீதத்தினர் இந்தியா, கிளியா, ஆப்கானிஸ்தான் புர்க்கினா, பாசோ, எதியோப்பியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தெற்காசிய நாடுகளில் மட்டும் 6கோடியே 40 இலட்சம் குழத் தைகள் ஊட்டச்சத்து மிக்க உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ள அந்த பட்டிலில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதார சிக்கல்களில் இருந்து ஓரளவு மீண்டாலும் உணவுப் பண்டங்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களின் விலைகளும் அதிகரித்திருப்பதே இந்த அவல நிலைக்கு காரணம் என்று அறிக்கையில் மேலும் கட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்