இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை தமிழரசுக் கட்சியினர் சந்தித்து கலந்துரையாடினர்

3 months ago



இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை நேற்று(20) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே நோர்வே தூதுவருடனான சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.

எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இதன்போது பேசினோம் என்று சந்திப்பில் கலந்து கொண்ட சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.