இயந்திர உதிரிப்பாகங்கள் இல்லாததால் தரையிறக்கப்பட்ட 03 விமானங்களுக்கு குத்தகையாக ஒரு மாதத்துக்கு 9 மில்லியன் டொலரை அரசு செலுத்தியது

2 months ago



இயந்திர உதிரிப்பாகங்கள் இல்லாததால், மூன்று விமானங்கள் தரையிறக்கப்பட்ட போதிலும், சிறிலங்கன் எயார் லைன்ஸ் அதிகாரிகள், மூன்று வருடங்களுக்கான குத்தகைத் தொகையாக ஒரு மாதத்துக்கு 9 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.2.6 பில்லியன்) செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விமானங்களில் ஒன்று தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படத் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

புதிய அரசாங்கம் விமான சேவையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டது.

மேலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறையை மேம்படுத்துவதற்கான வழி காட்டுதல்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அண்மைய பதிவுகள்