போலந்து தனியார் விமான நிறுவனமான என்டர் எயார் இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.


போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் எயார் இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
வார்சா - கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் எயார் கூறியுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையி லான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.
அதன் முதல் விமானமானது நேற்று முன்தினம் கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானம் நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் அதில் பயணம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
