தேசிய மக்கள் சக்தி, தனது ஆசனத்தை இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கு வழங்கியது.
தேசிய மக்கள் சக்தி, தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கு வழங்கியுள்ளது.
இதன்மூலம் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக பார்வையற்ற நபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் பார்வையற்றவர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றில் செயற்படவிருப்பதால் தேசிய மக்கள் சக்தி, தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கு வழங்கியுள்ளது.
எனவேதான் நாடாளுமன்ற ஆவணங்களை கண் பார்வை அற்றவர்களுக்கான பிறெய்லி எழுத்துகளிலும் அச்சிட முடிவெடுக் கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ரொஷானி குணதீர மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகத்வசந்த டீ சில்வாவுக்கு பின்வரிசையில் இலகுவாக அமரக் கூடிய வகையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உதவியாக உதவியாளர் ஒருவர் எந்நேரமும் அவருடன் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதகவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.