சிறீலங்கன் எயார் லைன்ஸை தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டம் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 months ago
சிறீலங்கன் எயார் லைன்ஸை தனியார் மயப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் திட்டம் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு சிறீலங்கன் எயார் லைன்ஸின் அவசியத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பேரவை தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனவே, சிறீ லங்கன் எயார் லைன்ஸை தனியார் மயப்படுத்தப் போவதில்லை என்றும் அதன் முகாமைத்துவம் விரைவில் சீரமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக சிறீலங்கன் எயார் லைன்ஸின் 51 கோடி அமெரிக்க டொலர் கடனுக்காக 51சதவீத பங்குகளை தனியாருக்கு விற் பனை செய்வதற்கு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புக் கொண்டிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.