இந்தியாவில் மனைவியை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது

9 hours ago



இந்தியாவில் மனைவியை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் குருமூர்த்தி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளான நிலையில் இரு பிள்ளைகள் இருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இராணுவ வீரருக்கும் அவரது மனைவியிற்கும் அடிக்கடி குடும்ப தகாராறுகள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாள்களாக தனது பெண்ணை காணவில்லை என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் கணவனை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் தெரிவித்த விடயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது, சம்பவ தினம் தனது மனைவியுடன் வாக்குவாதம் முற்றியமையினால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை வெட்டி துண்டுகளாக்கி குளிர்சாதனபெட்டியில் வைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, யூடியூப் மற்றும் ஆங்கில திரை படங்களை பார்த்து எலும்புகளை கரைப்பது எப்படி என கற்றதாகவும், சோதனை முயற்சியாக தெரு நாய் ஒன்றை கொன்று குக்கரில் வேகவைத்து வெயிலில் காயவைத்து பொடிப்பொடியாக்கி கால்வாயில் கரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை போலவே தனது மனைவியின் உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பொடிப்பொடியாக்கி, கால்வாயில் கரைத்ததோடு மீதம் உள்ள எலும்புகளை ஏரியில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் உலகளவில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் சமூக வலைதளம் உட்பட ஊடகங்களிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்