அவுஸ்திரேலியா புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம், தொழில்நுட்பக் கோளாறால் இரத்து செய்யப்பட்டுள்ளது

2 months ago




அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (09) அதிகாலை 12:30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நோக்கிப் புறப்படவிருந்த விமான சேவையை இரத்துச் செய்ய நேரிட்டதாக அதன் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இதன்படி, அவசர தேவையின் அடிப்படையில் பயணிகளை வேறு மாற்று விமானங்களில் அனுப்ப ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏனைய பயணிகள் நாளை (10) நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.