கண்டியில் பாடசாலை மாணவி வானில் கடத்தப்பட்ட சம்பவம், பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்

3 hours ago



கண்டி, கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வானில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை நிலையத்துக்கும், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம் பொடை பொலிஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி கடத்தப்பட்ட தினம் சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடாகப் பயணித்த கம்பளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவுலகல  பொலிஸாருக்கு அறிவித்த போதும், கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்