நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை எதிர்வரும் 22ஆம் திகதி அவர் சென்னையில் அறிமுகம் செய்யவுள்ளார்.
விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை மிகப்பிரமாண்ட மாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காணியில் தேசிய மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாநாட்டுக்கு முன்பு கட்சியின் கொடியை 22ஆம் திகதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் விஜய் அறிமுகம் செய்யவுள்ளார்.