மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் இரங்கல் திருப்பலி மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர்வதித்து அர்ச்சிக்கப்பட்டன.

2 months ago



மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்குத்தந்தை தலைமையில் இரங்கல் திருப்பலி மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர்வதித்து அர்ச்சிக்கப்பட்டன.

மரித்த விசுவாசிகளின்                 கல்லறைகளில் உறவினர்கள் நினைவு அஞ்சலி செலுத்தி உருக்கத்துடன் மன்றாடி நினைவு கூர்ந்தனர்.

மேலும், மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள கத்தோலிக்க கல்லறை தோட்டங்களிலும் இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபையால்                                  முன்னெடுக்கப்படும் மரித்த விசுவாசிகள் நித்திய        இழைப்பாற்றிக்காகவும் மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து கொள்ளவும் செபிக்கும் வகையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

அண்மைய பதிவுகள்