ஜனாதிபதி வேட்பாளர் மூவரில் ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுக்கான நிரந்தமான அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும் - எம்.பி சுமந்திரன் தெரிவிப்பு.

3 months ago


ஜனாதிபதி வேட்பாளர்களில் மூவரில் ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுக்கான நிரந்தமான அரசியல் தீர்வு பெறப்படவேண்டும். அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி செயற்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் 

யாழில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் வாஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

பிரதான ஜனாதிபதி வேட்பாளராக அடையாளமாக கண்டு இருக்கின்றோம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம் மூன்று பேர்களும் அதிகார பகிர்வு உச்சகட்டத்தில் செயற்படுவோம் என்று சொல்லியிக்கின்றார்கள்.

அதில் ஜனாதிபதி வேட்பாளர் மிக கூடுதலான அதிகார பரவலாக்கலினை தமிழ் மக்களுக்கு செய்து தருவதாக கூறியிருக்கின்றார்கள் அது தான் அவருடனான இணக்கப்பாடு செய்யப்பட்டுயிருக்கின்றது..

பலராலும் கேட்கப்படுகின்றது ஜனாதிபதி வேட்பாளரில் ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸ்ஸ நாயக்க ஆகிய இருவரில் ஒருவர் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? என்று கேட்டுள்ளனர்.

இது நியாயமான கேள்வி மூவரினை அதிகார பகிர்வுக்கான வாக்குறுதியினை கொடுத்திருக்கின்றோம்.

அது எங்களுடைய பேரம் பேசுதலில் அடிப்படையில் செய்யப்பட்டு இருக்கின்றது.

மூவரில் எவர் ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க இலங்கை தமிழரசு க்கட்சி செயற்படும்.என்றார்.