இலங்கையில் நிதி மோசடிக் குற்றங்களில் சிக்கி ஏமாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின் றது என்று இலங்கை கணினி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்க நிறுவனங்களின் பேரில் நிதி மோசடி முயற்சிகள் இப்போது அதிகரித்துள்ளன.
இவ்வகையான மோசடிகள் அரசாங்க நிறுவனங்களின் முத்திரையைக் கொண்ட மின்னஞ்சல்கள் மூலம் இடம்பெறுவதாகவும் பெறுநர்களை கட்டாயமாக பணம் செலுத்தும்படி அவை அறிவுறுத்துவதாகவும் தெரியவருகின்றது.
அதேவேளை கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக 7,900 முறைப்பாடுகளும் நிதி மோசடி தொடர்பாக 1,830 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.