யாழ் மிருசுவில் காய்ச்சல் காரணமாக 67 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2 months ago



யாழ். தென்மராட்சி மிருசுவில், விடத்தல்பளையைச் சேர்ந்த ந.புஷ்பராணி (வயது-67) என்பவரே உயிரிந்துள்ளார்.

நான்கு நாள்கள் காய்ச்சல் நீடித்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி சாவகச்சேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றபோது மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

அண்மைய பதிவுகள்