இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று (24) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினர்
5 months ago

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள அறுகம்பை பகுதியில் வைத்து இஸ்ரேலியர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால் மேலும் இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும், இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்ததையடுத்து குறித்த இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு ஒரு நிலையான கால அட்டவணைக்கமைய விமானங்கள் இல்லாததால், அவர்கள் துபாய்க்கு சென்று அங்கிருந்து இஸ்ரேல் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
