பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உட்பட மூவருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை.
7 months ago

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சம்பவ இடத்துக்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் துண்டுப் பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சற்குணதேவி ஜெகதீஸ்வரன், செல்வராசா உதயசிவம் ஆகிய மூவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்பிரகாரம் எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு குறித்த மூவருக்கம் அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
