யாழ்.மல்லாகம் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து தம்மை தாக்கினர் என சட்டத்தரணி ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், இலங்கைத் தமிழ் கனேடியர்கள் இருவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். நீதிவான் முன் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களான தந்தையும் அவரது மகனும் அண்மையில் விடுமுறையில் திரும்பிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் என்று கூறப்படும் ஒரு தரப்பினர், கனடாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தம்மை அச்சுறுத்தினர் எனக் குற்றம் சுமத்தி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அன்றே இச்சம்பவம் நடந்துள்ளது