வவுனியா மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நாய் ஒன்று சுட்டுக்கொலை

2 weeks ago



வவுனியா மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நாய் ஒன்று சுட்டுக்கொலை

இந்த மருத்துவமனையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்துள்ளார்.

மருத்துவமனையின் பிரேத அறை அருகில் நின்ற நாய் மீதே பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக்கொன்றதாக தெரிய வருகிறது.

இதனால் காயமடைந்த நாய் இரத்தம் சிந்த இழுபட்டு சென்று வேலி ஓரமாக உயிரிழந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் மருத்துவமனை பணிப்பாளரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் உறுதியளித் துள்ளார்.



அண்மைய பதிவுகள்