மனிதர்களுக்கு செய்வது போல் நாய்க்கும் இறுதிச் சடங்கை செய்த வட்டுக்கோட்டை மக்களின் நெகிழ்ச்சிச் சம்பவம்

3 months ago


யாழ்.வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கை செய்தமை நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

பைசா என்று அழைக்கப் படும் ரொட் வீலர் இன நாய் கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது.

இந்நிலையில், தனது 18 வயதை தாண்டிய பைசா கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது.

இறுதிச் சடங்கை செய்தவர் கடந்த 10 வருடங்களாக பைசாவை வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக தனக்கு பாதுகாப்பை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்குபோல பைசாவுக்கும் இறுதிச் சடங்கை நடத்தி நெகிழ வைத்துள்ளார்.

பான்ட் வாத்தியம் இசைக்க நாயின் சடலம் வட்டுக்கோட்டை எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் பைசாவின் எஜமானின் காணியில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.