அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுகின்றன ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சுட்டிக்காட்டு.
அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுகின்றன ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சுட்டிக்காட்டு
ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன் படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் நிறுவனமானது, தேர்தலுக்கு முந் தைய நிவாரணங்கள் மற்றும் சம் பள உயர்வுகள் வழங்குதல் தொடர் பான அரசாங்கத்தின் அண்மைக் கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங் களை தெளிவாக மற்றும் வேண்டு மென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பில் ட்ரான்ஸ் பரன்சி இன்டர்நஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2025 ஜனவரி முதல் ரூ. 25,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் சேர்த்து, 24 முதல் 35 சதவீத சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.
இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பொது சேவைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் வாக்காளர்கள். இது தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.12,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது.
மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும், தேயிலை பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரமானிய மும் ஆகஸ்ட் 22 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் அண்மையில் ரூ. 1,700 ஆக உயர்த் தப்பட்டது. புதிதாக வாக்குறுதிய ளிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகளுக்கான நிதியை எந்த வழியில் திரட்டப் போகிறது என்பதை அரசாங்கம் எங்கும் விளக்கவில்லை.
எவ்வாறாயினும், பொதுமக்கள் அல்லது பொது அதிகாரிகளுக்கான மானியங்கள், சம்பள உயர்வுகள் அல்லது நன்மைகளை வழங்குவதை எதிர்க்கவில்லை, மாறாக அவை செயல்படுத்தப்படும் நேரத்தை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் வலியுறுத்துகிறது.
தேர்தல் காலத்தில் ஒரு வேட்பா ளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஊக்குவிக் கவோ அல்லது தடுக்கவோ பொது வளங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று சட்டம் தெளிவுபடுத்துகிறது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடைமுறைகளைக் குறைக்க உடன டியாக நடவடிக்கை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் கடுமையாக வலியுறுத்துகிறது என்றுள்ளது.